லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்பட தெலுங்கு போஸ்டர் தற்போது வெளியாகவுள்ளது.
செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. படத்தில் அனுராக் காஷ்யப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் வெளியான படத்தின் ‘நாரெடி தான் வரவா’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. காஷ்மீர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. படம் வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று (17) இப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். அவ்வகையில் ‘லியோ’ படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகியிருக்கிறது. ‘Keep calm and avoid the battle’ என்ற வாசகங்களுடன் வெளியான போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நேற்று முன்தினம் (16) SIIMA விருது நிகழ்ச்சியில் பேசிய லோகேஷ் லியோ படத்தின் புரோமோஷன் வேலைகள் விரைவில் தொடங்கும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.