கடந்த திங்கட்கிழமை தொடக்கம் கீர்ன்லாந்தில் சேற்றுப் பகுதியில் சிக்கி இருந்த சொகுசு கப்பல் ஒன்று வெளியே கொண்டுவரப்பட்டுள்ளது.
வடகிழக்கு கீரின்லாந்து தேசிய பூங்க பகுதிக்குள் 206 பயணிகளுடன் தரைதட்டி இருந்த கப்பலை கடந்த வியாழக்கிழமை (14) கீரீன்லாந்து ஆய்வு இழுவை படகு ஒன்று மீட்டுள்ளது.
கப்பலில் இருந்த எவருக்கு காயம் ஏற்படவில்லை என்று அதன் உரிமை நிறுவனமான சன்ஸ்டோன் குறிப்பிட்டுள்ளது. எனினும் கப்பலில் இருந்த சிலருக்கு கொவிட்–19 ஏற்பட்டிருப்பதாக அதன் சுற்றுலா செயற்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு கீரின்லாந்து தேசிய பூங்க என்பது பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளை ஒன்றிணைத்த அளவு பெரிதானதாகும். இங்கு பனிப்பாறைகள் மற்றும் மலைகள் பிரபலமானதாகும். துருவக் கரடிகள் போன்ற விலங்குகளும் இங்கே உள்ளன.
சொகுசு கப்பல் சிக்கியிருந்த காலத்தில் கப்பலில் இருந்த பயணிகள் தொலைவில் தெரியும் பனிமலைகளை கண்டு ரசித்து வந்ததாக கூறப்பட்டது.