காலஞ்சென்ற பிரிட்டன் இளவரசி டயானா இளம் வயதில் அணிந்த சிவப்பு நிற கம்பளிச்சட்டை ஒன்று 1.1 மில்லியன் டொலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இணைய ஏல விற்பனையிலேயே இது விலை போனதாக செளதபிஸ் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
1981 ஆம் ஆண்டு அப்போது இளவரசராக இருந்த சார்ள்ஸுடன் திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்ற பின்னர் தனது 19ஆவது வயதில் டயானா இந்த கம்பளிச்சட்டையை அணிந்திருக்கும் புகைப்படம் பிரபலமானதாகும்.
இந்நிலையில் கடந்த வியாழனன்று (14) இடம்பெற்ற ஏலத்தில் இந்த கம்பளிச்சட்டை 50,000 தொடக்கம் 80,000 டொலர்கள் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடும் போட்டிக்கு பின்னர் 10 மடங்கு விலையில் ஏலம்போயுள்ளது.
எனினும் ஏலத்தில் இந்த கம்பளிச்சட்டையை யார் வாங்கினார் என்ற விபரம் வெளியிடப்படவில்லை.
இது அதிக விலைபோன இளவரசி டயானாவுக்கு சொந்தமான ஆடையாக பதிவானது. இதற்கு முன்னர் அவரது மேலங்கி ஒன்று 604,000 டொலர்களுக்கு ஏலம்போனது.