Tuesday, October 15, 2024
Home » பன்றியிலிருந்து மனிதனுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை

பன்றியிலிருந்து மனிதனுக்கு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை

by gayan
September 17, 2023 10:53 am 0 comment

மூளைச்சாவு அடைந்த நோயாளிக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் 61 நாட்கள் நீடித்த பரிசோதனையை முடித்துக்கொண்டுள்ளனர்.

இனங்களுக்கு இடையிலான மாற்று அறுவைச் சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் அந்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

அமெரிக்காவில் 103,000 பேர் உடலுறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களில் 88,000 பேருக்குச் சிறுநீரக அறுவைச் சிகிச்சை தேவைப்படுகிறது.

கடந்த 2 மாதங்களாக மிக தீவிரமான கண்காணிப்பும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதன் அடிப்படையில் எதிர்காலம் குறித்து நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக நியூயோர்க் பல்கலைக்கழகத்தின் மாற்று அறுவைச் சிகிச்சைத் துறை பணிப்பாளர் டொக்டர் ரொபர்ட் மோண்ட்கோமரி கூறியுள்ளார். இந்த அறுவைச் சிகிச்சையை டொக்டர் மோண்ட்கோமேரி 5ஆவது முறையாகச் செய்துள்ளார்.

2021இல் அவர் உலகின் அத்தகைய முதல் மாற்று அறுவைச் சிகிச்சையைச் செய்தார்.

பன்றிகளின் உறுப்புகள் சிறியவையாக இருப்பதாலும் பன்றிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும் இப்போதைக்கு அவைதான் மனிதனுக்கு உடலுறுப்பு தானம் செய்ய ஏற்றவையாக இருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x