Wednesday, May 22, 2024
Home » நிலவு, சூரியன் ஆய்வுகளையடுத்து ஆழ்கடலுக்குள் இறங்கும் இந்தியா!

நிலவு, சூரியன் ஆய்வுகளையடுத்து ஆழ்கடலுக்குள் இறங்கும் இந்தியா!

by gayan
September 17, 2023 4:34 pm 0 comment

சந்திரயான், ஆதித்யா திட்டங் ங்களையடுத்து ஆறு கி.மீ ஆழக்கடலுக்குள் மனிதர்களு டன் பயணம் செய்யும் நீர்மூழ்கி வாகனம் தமிழகத்தில் தயாராகின்றது!

நிலவின் தென்துருவத்தில் ஒரு வெற்றிகரமான ‘மென்மையான தரையிறக்கத்தை’ அடைந்த பிறகு, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா- 1 என்ற விண்கலத்தை அனுப்பியிருந்தது இந்திய விண்வெளி ஆய்வு நிலையமான இஸ்ரோ.

விண்வெளி ஆய்வுடன் மாத்திரம் இந்தியா நின்றுவிடவில்லை. கடலின் ஆழத்தில் உள்ள இதுவரை அறியப்படாத மர்மங்களைக் கண்டுபிடிப்பதிலும் இந்திய விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நிலவின் ஆய்வு போன்று கடலின் ஆய்வும் பரபரப்பும் புதுமையும் நிறைந்ததாகும்.

இந்தியா இப்போது ஆழ்கடல் ஆய்வு மற்றும் பல்லுயிர் மதிப்பீடுகளுக்காக கடலுக்குள் 6 கி.மீ ஆழத்திற்கு மூன்று மனிதர்களை ஏற்றி செல்லும் ‘மத்ஸ்யா 6000’ எனும் நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து வருகிறது. இதன் மூலம் உலக நாடுகளின் கவனம் இந்தியாவின் மேல் திரும்பியுள்ளது. அறிவியல்துறையில் இந்தியாவின் அதீதத்திறமைகள் குறித்து உலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

இந்திய மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு, ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல் மத்ஸ்யா 6000 இன் வீடியோ மற்றும் படங்களை ட்வீட் செய்திருந்தார். அப்போதிலிருந்து மத்ஸ்யா 6000 இன் படங்கள் சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகின்றன. இது கடலின் ஆழத்தை ஆராயும் ‘சமுத்ராயன்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சென்னையில் உள்ள நெஷனல் இன்ஸ்டிடியூட் ஒப் ஓஷன் டெக்னோலொஜி (NIOT) கப்பலை உருவாக்கி வருகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் கடினமாக உருவாக்கப்படும் மத்ஸ்யா 6000 வெற்றிகரமாக கடலுக்குள் செல்லும் என்று நம்பப்படுகின்றது.

இந்த வாகனம் 2.1 மீட்டர் விட்டம் மற்றும் 600 பார் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய 80 மி.மீ தடிப்பு கொண்ட டைட்டானியம் அலாய் ஸ்பியர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பயணத்தின் ஒரு பகுதியாக, அரிய கனிமங்களுக்காக ஆழ்கடல்களை ஆராய்வதற்காக இந்தியக் குழுவின் ஆழமான நீரில் மூழ்கும் வாகனமான மத்ஸ்யா 6000 பயன்படுத்தப்படும்.

இந்தியாவின் முதன் முதல் கடல் ஆய்வு பயணம் இதுவாகும். இந்தியாவின் முதல் மனித கடல் ஆய்வுப் பணியாக இது இருக்கும். உண்மையில், நீருக்கு அடியில் 6,000 மீற்றர் வரை கோள வாகனத்தில் மனிதர்களால் பயணிக்க முடியும். இருப்பினும் நீருக்கடியில் உல்லாசப் பயணம் 500 மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும். அதற்கு கீழே ஆய்வுகளுக்காக மட்டுமே மனிதர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

இந்த ஆய்வுகள் எதுவும் கடல் வாழ்விடத்தையும், கடல்வாழ் உயிரினங்களையும் பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக சந்திரயானை நிலவில் தரையிறக்கியதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- 1 விண்கலத்தை அனுப்பியிருந்தது. இதன் பரப்பரப்பு அடங்குவதற்குள் சமுத்ராயன் மிஷனின் கீழ் உருவாக்கி வரும் மத்ஸ்யா 6000 நீர்மூழ்கிக் கப்பலின் போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இந்த வாகனத்துக்குள் மூன்று பேர் வரை பயணிக்கலாம். ஆழ்கடல் வளங்களை ஆராய்வதற்கும் கடல் பல்லுயிர் பெருக்கத்தை மதிப்பிடுவதற்கும் இந்த ஆய்வு பயன்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று பேர் இந்தியாவின் முதல் ஆட்களைக் கொண்ட ஆழ்கடல் பணியான சமுத்ராயனில் அனுப்பப்படுவார்கள். இது இந்தியாவின் ெகான்டினென்டல் ஷெல்ஃப் மற்றும் பிரத்தியேக பொருளாதார மண்டலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்கடல் ஆய்வுகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியாகும்.

கடலின் கனிமங்களில் மங்கனீஸ், நிக்கல், கோபால்ட், செப்பு மற்றும் இரும்பு ஹைட்ரொக்ைசட் ஆகியவை முக்கியமானவையாகும். இவை மனித தேவைக்குப் பயன்படுத்தக் கூடிய கனிமங்களாகும்.

இந்த ஆய்வின் மூலம் கடலின் ஆழத்தைப் பற்றி இதுவரை உலகுக்குத் தெரியாத பல விஷயங்கள் நமக்குத் தெரியவரும். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையான ‘ப்ளூ எகானமி’யை இந்த மத்ஸ்யா 6000 ஆதரிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கும், கடல் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதை அதிகரிப்பதும் இதன் நோக்கமாகும். அனைத்துப் பணிகளும் முடிந்த பிறகு 2026 ஆண்டு முடிவடைவதற்குள் மத்ஸ்யா 6000 இல் மனிதர்கள் மிகச்சாதாரணமாகப் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT