ஜி20 கூட்டத்தில் ரஷ்யா – உக்ரைன் போரை உலக நாடுகள் மத்தியில் இந்தியா கையாண்ட விதம் பலருக்கும் வியப்பு அளித்தது மட்டும் அல்லாமல் ரஷ்யாவுடனான உறவு தேவை என்பதையும் மறைமுகமாக காட்டியுள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தொடர்பாக 2 விஷயங்கள் நடந்துள்ளன.
ரஷ்யா அரசு சைபீரிய பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளுக்கு போதுமான உற்பத்தி பொருட்களின் விநியோகத்தை வழங்குவதற்காக கடந்த சில மாதங்களில் இந்தியாவில் இருந்து அலுமினிய உலோகத்தின் தாதுக்களான அலுமினாவை இறக்குமதி செய்வதை தொடங்கியுள்ளது.
உலக நாடுகள் விதித்துள்ள தடையைத் தாண்டி வர்த்தகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஷ்யா, தனது நாட்டுக்கான விநியோகத்தை நிலையானதாகவும், மேம்படுத்தப்படவும் பல நாடுகளில் இருந்து மேம்படுத்த திட்டமிட்டமிட்டுள்ளது.
இதனால் சீனாவை மட்டுமே சார்ந்திருப்பதைக் குறைக்க முடிவு செய்துள்ளது ரஷ்யா.
ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக சர்வதேச வர்த்தகத் தொடர்புகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு மூடப்பட்டன. எனவே இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்புகளை அதிகரிக்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகின்றது.