146
மூன்று மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்கை பிரதேசம் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பிரதேசம் ஆகியவற்றுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, இரத்தினபுரி மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேசங்களுக்கு மஞ்சள் நிற மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.