மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே பௌத்த விகாரைகளை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றனரென்ற சந்தேகம் எழுவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந்து
மீட்கப்பட்ட எச்சங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார். மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளதெனவும் ஒவ்வொரு இடத்திலும் மனித எச்சங்களை கண்டுபிடித்து கிடப்பில் போடும் நிலையே இலங்கையில் காணப்படுவதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.