இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பதிரண, எதிர்வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ராங்புர் ரைடர்ஸ் அணியில் ஆடுவதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு சம்பியனான ராங்புர் அணியில் ஆடுவதன் மூலம் 20 வயதான மதீஷ பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் அறிமுகம் பெறவுள்ளார் என்று அந்த அணி தனது சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
இதன்படி லசித் மாலிங்க பாணியில் பந்துவீசக் கூடிய பதிரண, இலங்கை அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவுடன் அந்த அணியில் இணையவுள்ளார்.
ராங்புர் ரைடர்ஸ் அணியின் தலைவராக பங்களாதேஷ் அணியின் தலைவர் சகீப் அல் ஹஸன் செயற்படவுள்ளதுடன், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி துடுப்பாட்ட வீரர் நிக்கோலஸ் பூரன் ஆகிய வீரர்கள் இந்த அணியில் விளையாடவுள்ளனர்.
பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதிரண ஏற்கனவே இந்திய பிரீமியர் லீக் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த முறை சம்பியனான சென்னை அணிக்காக அவர் 12 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.