ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் அவிசாவளை கிரிவன்தல பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் அவ்வீதியினூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை கிரிவன்தல பகுதியில் நேற்றுமுன்தினம் (13.09.2023) இரவு 7.30 மணியளவில் பாரிய மரமொன்று சரிந்து பிரதான வீதியில் வீழ்ந்தமையால் அவ்வீதியினூடான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மரம் அவ்வீதி ஊடாக பயணித்த முச்சக்கர வண்டியொன்றின் மீதும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் முறிந்து விழுந்துள்ளது. இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)