Home » 2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க நிறுவனங்கள் வரிசையில் HNB

2022 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க நிறுவனங்கள் வரிசையில் HNB

by sachintha
September 15, 2023 5:57 am 0 comment

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2022 ஆம் ஆண்டில் ஐந்தாவது தடவையாக இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது.

The American Institute of Certified Public Accountants மற்றும் Chartered Institute of Management Accountants (AICPA & CIMA), The International Chamber of Commerce Sri Lanka (ICCSL) ஆகியவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த தரவரிசை, பங்குதாரர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்கி, நிறுவன சிறப்பை ஊக்குவிக்கும் இலங்கை நிறுவனங்களை அங்கீகரிக்க ஒரு தளமாக செயல்படுகிறது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்க கலந்துகொண்டதுடன், இந்த நிகழ்வில் முக்கிய உரையை இலங்கைக்கான ஜப்பானின் பிரதித் தூதுவர் Katsuki Kotaro நிகழ்த்தினார்.

வலுவான உள்ளூர் மற்றும் உலகப் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்கையில், இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களில் ஒன்றாக HNB இன் மீள் உறுதிப்படுத்தல், எமது குழுவின் மதிப்புகள் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, அத்துடன் HNB தொடர்ச்சியாகக் கொண்டிருக்கும் செயற்பாட்டுச் சிறப்புகள் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் வலுவான மற்றும் நெகிழ்ச்சியான அடித்தளத்தைப் பறைசாற்றுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x