புத்தாக்கம் மற்றும் பயனர்களை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான அதன் ஓயாத அர்ப்பணிப்பின் எதிரொலியாக, DFCC வங்கியின் புத்தாக்கத்துடனான இணையத்தளம் மீண்டும் ஒரு முறை வெற்றிபெற்றுள்ளதுடன், BestWeb.LK Awards 2023 விருதுகள் நிகழ்வில் வங்கிச்சேவை மற்றும் நிதிப் பிரிவில் மிகச்சிறந்த இணையத்தளத்திற்கான மதிப்புமிக்க வெள்ளி விருதை தனதாக்கியுள்ளது.
இந்த விருதானது வங்கியைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினைக் குறித்து நிற்பதுடன், டிஜிட்டல் துறையில் ஒரு புத்தாக்குநராக அதன் ஸ்தானத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வண்ணம், தொடர்ந்து 4 ஆவது ஆண்டாக அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. BestWeb.LK விருதுகள் என்பது LK Domain Registry ஆல் ஒழுங்கமைக்கப்படுகின்ற டிஜிட்டல் மேன்மைக்கு அங்கீகாரமளிக்கும் வருடாந்த கொண்டாட்டமாகும்.