இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களில் ஒருவரான Hayleys Fabric PLC, தொழில்துறை கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களாக மாற்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Pro Green Laboratories உடன் கைகோர்த்துள்ளது.
FaBriEco ஒத்துழைப்பின் நோக்கம், ஆடைத் தொழில்துறையின் துணை தயாரிப்புகளான கழிவாக அகற்றப்படும் சாயங்கள், கழிவாக வீசப்படும் துணிகள் மற்றும் புகையாக பறக்கும் சாம்பல் போன்ற உற்பத்திக் கழிவுகளைப் பயன்படுத்தி உள்ளூர் சந்தைக்கு மலிவு விலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குவதாகும். இந்த முயற்சியானது Pro Green Laboratoriesன் பேராசிரியர் ரங்கிகா யூ ஹல்வத்துரவின் செயற்பாடுகளின் கீழ் நடத்திய ஆய்வின் அடிப்படையில் அமைந்ததுடன் மண் கொன்கிரீட் செங்கற்கள் மற்றும் பாலிமர் சுய-கச்சிதமான மண் செங்கற்கள் போன்ற நிலையான தயாரிப்புகளுக்கான காப்புரிமையை அவர் ஏற்கனவே பெற்றுள்ளார்.
“இந்தக் கூட்டாண்மை பசுமையான எதிர்காலத்தை உருவாக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். Pro Green Laboratories உடன் எங்களின் நிலைத்தன்மை குழுவில் இணைவதன் மூலம், கழிவு நிர்வகிப்பு மற்றும் உற்பத்தியில் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும், இது ஒரு வட்டப் பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும்.” என Hayleys Fabric இன் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் குணதிலக்க தெரிவித்துள்ளார்.