Bio Foods (Pvt.) Ltd நிறுவனம் உலகளாவிய ரீதியில் சேதன மற்றும் நியாய வர்த்தக விவசாயத்தில் முன்னணியில் திகழ்வதன் மூலம் அதன் 30ஆவது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது. நிறுவனத்தின் தலைவரான கலாநிதி ஏ. சரத் ரணவீரவினால் 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Bio Foods ஆனது, நிலைபேறான மற்றும் நெறிமுறையான விவசாய நெறிமுறைகளுக்கான ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது.
சாதகமான மாற்றத்தை வளர்ப்பதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன், சான்றளிக்கப்பட்ட விவசாயிகள் குழுக்கள் முதல் செயலாக்க தொழிற்சாலைகள் மற்றும் இறுதி நுகர்வோர் தயாரிப்பு வரை முழு உணவு உற்பத்திச் சங்கிலியையும் தழுவியவாறு நிறுவனம் சிறப்பாக செயற்பட்டு வருகிறது.
நிறுவனம், சேதன சான்றிதழ் தரநிலைகளை கடுமையாக பின்பற்றி அதனை உறுதியுடன் கடைப்பிடிப்பதன் மூலம், தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், பூச்சிகொல்லிகள், மரபணு மாற்றப்பட்ட செயற்பாடுகள் மூலமான தயாரிப்புகள் போன்றவற்றால் கறைபடாமல் இருப்பதை உறுதி செய்கிறது.
மேலும், 1990 களின் முற்பகுதியில் Fairtrade Labeling Organization (FLO) இனது தரநிலை அமைக்கும் குழுக்களின் உறுப்பினர், கலாநிதி ரணவீரவின் மதிப்பிற்குரிய பதவியானது, இன்று உலகளாவிய ரீதியில் பயன்படுத்தப்படும் நியாயமான வர்த்தக ஒழுங்குமுறைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
அதேசமயம், Bio Foods இன் உறுதியான நியாயமான வர்த்தக நடைமுறைக் கொள்கைகள் மற்றும் ஏற்றுமதி வருமானம் ஆகியன நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற சிறிய அளவிலான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துகின்றன.