Wednesday, September 27, 2023
Home » இலங்கையின் ரியல் எஸ்டேட் பிரிவில் புதிய யுகம் படைக்கும் ஜோன் கீல்ஸ்

இலங்கையின் ரியல் எஸ்டேட் பிரிவில் புதிய யுகம் படைக்கும் ஜோன் கீல்ஸ்

by sachintha
September 15, 2023 6:53 am 0 comment

உயர் ரக வதிவிட தொடர்மனைகளை நிர்மாணிப்பதற்காக புகழ்பெற்றுள்ள JKP, இலங்கையின் நகர வாழ்விடக் கட்டமைப்பை மாற்றியமைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. The Emperor, The Monarch, 7th Sense, OnThree20, TRI-ZEN மற்றும் 4.5 மில்லியன் சதுர அடிப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் Cinnamon Life ரிசோர்ட் ஆகியன புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றின் அடையாளமாக அமைந்துள்ளன.

வதிவிடத் திட்டங்களுக்கு மேலதிகமாக, நிறுவனம் Crescat Boulevard Mall, மொரட்டுவ மற்றும் ஜா-எல பிரதேசங்களில் K-Zone Malls மற்றும் கண்டி, திகன பகுதியில் Victoria Golf Resort ஆகியவற்றையும் செயற்படுத்துகின்றது. இந்த கொல்ஃப் திடல், உலகின் 100 மிகவும் அழகிய கொல்ஃப் திடல்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இதில் பிரத்தியேகமான காணிப் பகுதிகள் மற்றும் சொகுசான விடுமுறை இல்லப்பகுதிகள் போன்றனவும் அடங்கியுள்ளன.

புத்தாக்கத்துக்கான அர்ப்பணிப்பு என்பது ஏனைய நிறுவனங்களிலிருந்து JKP ஐ வேறுபடுத்தி காண்பிக்கும் அம்சமாக அமைந்துள்ளது. The Emperor மற்றும் The Monarch ஆகிய திட்டங்களினூடாக ஒன்றிணைக்கப்பட்ட வாழ்க்கைமுறை எனும் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், சொகுசான வாழிடங்களில் புதிய எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன.

கொழும்பின் மிகவும் பெருமைக்குரிய முகவரிகளில் ஒன்றான கிரெகரிஸ் வீதியில் 7th Sense என்பது வதிவிடப் பகுதியாக பிரத்தியேகமான சொகுசான வாழிட அம்சங்களை கொண்டு அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஸ்மார்ட் தொழில்நுட்ப ஒன்றிணைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள TRI-ZEN, நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT