446
நல்லூரான் காளை மாடு முட்டி ஆலய பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய நித்தியசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய நந்தவனத்தில் பணியாற்றும் பணியாளர் நேற்று (14) மாலை நந்தவனத்தில் வளர்க்கப்படும் காளை மாட்டிற்கு உணவளிக்க சென்ற சமயம் மாடு அவரை முட்டியுள்ளது.
மாடு முட்டியதில் காயமடைந்தவரை அங்கிருந்து மீட்டு , வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
நல்லூர் மகோற்சவம் நேற்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவுக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.விசேட நிருபர்