Wednesday, February 21, 2024
Home » நிலவின் மைனஸ் 253 பாகை நடுநடுங்கும் குளிரில் சந்திரயான்-3 என்ன செய்கின்றது?

நிலவின் மைனஸ் 253 பாகை நடுநடுங்கும் குளிரில் சந்திரயான்-3 என்ன செய்கின்றது?

by gayan
September 14, 2023 5:38 pm 0 comment

நிலவில் தற்போது மறை (மைனஸ்) 253 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நிலவுவதாக இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரயான்_ 3 இன் நிலைமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன.

சந்திரயான் 3 இன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டும் தற்போது நிலவில் உள்ளன. இவற்றில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து உறக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தென்துருவத்தில் சூரியன் தோன்றியதும் பிரக்யான் ரோவர் இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு மின்சார சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின்னர் அதை மீண்டும் இயங்க வைக்கும் பணிகள் நடக்கும்.

இதுஒருபுறமிருக்க, விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருந்த நிலையில் அதுவும் உறக்க நிலைக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் சென்றுவிட்டது.

14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்த நிலையில் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால், தற்போது இரண்டையும் விஞ்ஞானிகள் உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர். அடுத்த வாரம் இந்த விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய இரண்டும் நிலவில் மீண்டும் வெற்றிகரமாக கண்விழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. நிலவில் தற்போது நடுங்கும் குளிர் நிலவுகிறது. குளிரைத் தாக்குப் பிடிக்க எந்த வசதியும் சந்திரயானில் செய்யப்படவில்லை. ஆனால் இது போன்ற கருவிகள் அவசியம். ஆனால் அத்தகைய சக்தி அமைப்புகள் இல்லாமல், சந்திரயான் -3 இன் வாழ்க்கை சந்தேகத்துக்கு இடமாகவே உள்ளது. அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே நிலவில் சந்திரயான் 3 தாக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் தற்போது நிலவில் நிமிடங்கள் பரபரப்புடன் நகர்ந்து கொண்டு இருக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT