Home » நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத்திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தத்திருவிழா

by Prashahini
September 14, 2023 10:44 am 0 comment

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தீர்த்தத்திருவிழா இன்று (14) காலை நடைபெற்றது.

காலை 6.00 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வேல் பெருமான், வள்ளி, தெய்வானை, பிள்ளையார் , மற்றும் சண்டேஸ்வரர் ஆகியோர் காலை 7.00 மணிக்கு ஆலய தீர்த்த கேணிக்கு எழுந்தருளியதை தொடர்ந்து தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

தீர்த்த திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் , நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர் .

இதேவேளை இன்று மாலை 6.00 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்று, ஆலய மகோற்சவ திருவிழாக்கள் நிறைவடைந்தன.

அத்தோடு, நாளை மாலை 5.00 மணிக்கு முருக பெருமானின் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT