பேருவளை மஹகொடை சம்சுத்தீன் மகா வித்தியாலயத்தின் 2023ஆம் வருடத்திற்கான வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் அண்மையில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி எம்.எச்.எப். ஷிஹானா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை கல்வி வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் திருமதி என்.ஜி. ருவினி தீப்பானியும் கௌரவ அதிதிகளாக களுபோவில வைத்தியசாலை சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் இஷ்ராக் மும்தாஸ் மற்றும் பேருவளை வலய கல்விப்பணிப்பாளர் டபிள்யூ.ஏ.ஜே.யூ. சோமரட்னவும், விசேட அதிதிகளாக பேருவளை நகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஹஸன் பாஸி, முன்னாள் அதிபர் ஸுபைர் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்ததோடு மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.