நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மகோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில் நேற்று (11) 22 ஆம் நாள் உற்சவமான ஒரு முக திருவிழா மிக சிறப்பாக இடம் பெற்றது.
நல்லூர் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக சிவாச்சாரியாரின் கம்பீரமான வருகை அறிவிப்புடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது பிரதம சிவாச்சாரியாரால் நல்லூர் கந்தனின் வாள் முன்வர ஏனைய சிவாச்சாரியார்கள் முருகனின் வேலினை ஏந்தி வர கலைஞர்களின் கோலாட்டத்துடன் பல்வேறு வாத்தியங்கள் முழங்க கீர்த்தனைகள் முழங்க முருகப்பெருமான் வீதியுலா வந்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருமுகத் திருவிழாவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.