நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் திருவிழாவான இன்று (08) காலை சூர்யோற்சவம், நடைபெற்றது.
காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை அடுத்து, ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான், உள் வீதி உலா வந்து தொடர்ந்து வெளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
நல்லூர் மகோற்சவம் கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
எதிர்வரும் புதன்கிழமை (13) காலை 07 மணிக்கு தேர் திருவிழாவும் , மறுநாள் வியாழக்கிழமை (14) காலை தீர்த்த திருவிழாவும் நடைபெற்று அன்றைய தினம் மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.
யாழ்.விசேட நிருபர்