Home » நெல் வயலுக்குள் நிர்வாணமான நிலையில் சடலம் மீட்பு

நெல் வயலுக்குள் நிர்வாணமான நிலையில் சடலம் மீட்பு

by Prashahini
September 6, 2023 2:21 pm 0 comment

நிகவெரட்டிய நகர் பகுதியை அண்மித்த நெல் வயலொன்றின் நடுவில் இருந்து நிர்வாணமாக காணப்பட்ட காணப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று (05) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நிகவெரட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 40 – 45 மதிக்கத்தக்க வயதுடைய ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலம் நிர்வாணமாக காணப்பட்டதுடன், அந்த சடலம் சிதைவடைந்திருப்பதனால் அது யாருடையது என்பது பற்றி இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

மேலும், குறித்த சடலம் வெளிப் பிரதேசத்தில் இருந்து கொலை செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டு குறித்த நெல் வயலுக்குள் போடப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நிகவெரட்டிய பொலிஸாரும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நிகவெரட்டிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ. ஜே.நந்தனவின் ஆலோசனைக்கு அமைய, பொலிஸ் அத்தியட்சகர் வீரசிங்கவின் மேற்பார்வையில் நிகவெரட்டிய பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் திலக் சுபசிங்கவின் தலைமையில் பொலிஸ் குழுவும், பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x