Saturday, June 15, 2024
Home » உக்ரைனின் பிரதான தானிய ஏற்றுமதி துறைமுகத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் பிரதான தானிய ஏற்றுமதி துறைமுகத்தின் மீது ரஷ்யா தாக்குதல்

by sachintha
September 5, 2023 7:13 am 0 comment

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானை நேற்று (04) சந்திப்பதற்கு முன்னர் உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி துறைமுகங்களில் ஒன்றின் மீது ரஷ்யா ஆளில்லா வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

ஒடேசா பிராந்தியத்தில் டனுப் நிதியில் உள்ள உக்ரைனின் இரண்டு பிரதான தானிய ஏற்றுமதி வசதிகளில் ஒன்றான இஸ்மெயில் துறைமுகத்தின் குடியிருப்பாளர்களை அந்நாட்டு விமானப் படையினர் நேற்று காலையில் அப்புறப்படுத்தியுள்ளனர்.

தெற்கு பிராந்தியத்திற்கு மேலால் பறந்த 17 ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக ஒடேசா ஆளுநர் ஒலே கிபர் குறிப்பிட்டபோதும் இந்தத் தாக்குதல்களில் துறைமுக உட்கட்டமைப்புகளுக்கு பரந்த அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள உணவு பிரச்சினையை தணிக்கும் முயற்சியாக உக்ரைன் தானிய ஏற்றுமதி உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த ரஷ்யாவின் கருங்கடல் நகரான கொச்சியில் புட்டின் மற்றும் எர்துவான் சந்தித்த நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய நாடுகள் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்திலான உக்ரைனிய தானியங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்படிக்கையில் இருந்து ரஷ்யா கடந்த ஜூலையில் விலகிக் கொண்டது.

அது தொடக்கம் தானிய ஏற்றுமதிக்கான உக்ரைனின் பிரதான பாதையான டனுப் நதியின் துறைமுகங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

முன்னதாக மற்ற பிரதான டனுப் துறைமுகமான ரெனி மீது ரஷ்யா கடந்த ஞாயிறன்று (03) நடத்திய தாக்குதல்களில் துறைமுகத்தின் உட்கட்டமைப்புகளுக்கு சோதம் ஏற்பட்டிருப்பதோடு இருவர் காயமடைந்தனர்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா உலகின் பிரதான விவசாய உற்பத்தி நாடுகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT