Sunday, September 8, 2024
Home » நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கான சாத்தியம்

- மேல், சப்ரகமுவ மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

by Prashahini
September 5, 2023 9:16 am 0 comment

– யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று (05) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேற்கு, தெற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-50) கிலோமீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

சூரியனின் தொடர்பான தென்திசைநோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. அதற்கிணங்க இன்று (05) நண்பகல் 12.09 அளவில் பம்பலப்பிட்டி, மாலிபொட, கெப்பெட்டிபொல, படல்கும்புர மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x