கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று நிறைவடைந்திருந்தது.
பெரஹராவைக் காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இணைந்துகொண்டார்.
பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர் கிறிஸ் வென் ஹொலனும் (Chris Van Hollen), இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) ஆகியோரும் ஜனாதிபதியுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தனர்.
நேற்று (30) இரவு 7.03 சுப நேரத்தில் ஸ்ரீ தலதா மாளிகையின் முன்பாக வடக்கு திசையை நோக்கிப் பயணித்த எசல பெரஹராவானது, தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்த வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி ஊடாக பயணித்து ரஜ வீதியூடாகச் சென்றது.
வரலாற்று சிறப்புமிக்க எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹராவைக் காண, பாதையின் இருபுறமும் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.