687
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழாவின் 10 ஆம் நாள் திருவிழாவான மஞ்சத் திருவிழா நேற்று (30) மாலை வெகுசிறப்பாக இடம்பெற்றது.
சிற்ப சாஸ்திர ஆகம விதிமுறைப்படி கலையம்சமும் சிற்பங்களும் ஒருங்கே அமையப் பெற்ற அழகிய மஞ்சத்தில் முத்துக் குமாரசுவாமியாக முருகப் பெருமான் எழுந்தருளி அருள்
பாலித்தார்.