538
அக்கரைப்பற்று ‘ரிபில் பீ’ விளையாட்டு கழகத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அக்கரைப்பற்று லோர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.
அக்கரைப்பற்று பதுர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதிப்போட்டி கழகத்தின் தலைவர் முஹம்மட் பெரோஸ் தலைமையில் நேற்று முன்தினம் (28) நடைபெற்றது. இதில் ஒலுவில் இலவன் ஸ்டார் அணியை எதிர்கொண்ட லோர்ட்ஸ் அணி 5 ஓவர்களுக்கு நிர்ணயித்த 31 ஓட்ட வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டியது.