Saturday, July 13, 2024
Home » நள்ளிரவு முதல் கோதுமை மா இறக்குமதி வரி ரூ. 16 இலிருந்து ரூ. 27 ஆக அதிகரிப்பு

நள்ளிரவு முதல் கோதுமை மா இறக்குமதி வரி ரூ. 16 இலிருந்து ரூ. 27 ஆக அதிகரிப்பு

- கோதுமை மா இறக்குமதி அனுமதிப்பத்திர முறை இரத்து

by Rizwan Segu Mohideen
August 30, 2023 2:43 pm 0 comment

– கோதுமை விதைக்கு ரூ. 6 வரி விதிப்பு
“இறக்குமதி கட்டுப்பாட்டிலேயே மாற்றம்; கோதுமை மா விலை அதிகரிக்காது” – அமைச்சர்

கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திர முறை நேற்று நள்ளிரவு முதல் (30) அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (30) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், கோதுமை மா இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியும் ஒரு கிலோகிராமுக்கு ரூ. 16 இலிருந்து ரூ. 27 ஆக அதிகரிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் கோதுமை விதைக்கு ரூ. 6 வரியும் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாட்டிலேயே மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT