Home » இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜய் மகன்

இயக்குனராக அறிமுகமாகும் தளபதி விஜய் மகன்

- அப்பா ஹீரோவாக இருந்தும் விஜய் சேதுபதியை தேர்ந்தெடுத்த மகன்

by Prashahini
August 29, 2023 2:14 pm 0 comment

தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். பிரபல நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் அவர் இயக்குனராக அறிமுகமாக இருப்பதை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது twitter பக்கத்தில் உறுதி செய்திருக்கிறது. மேலும், லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் சுபாஷ்கரன் முன்னிலையில் அவர் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் புகைப்படங்களை தற்போது அந்த நிறுவனம் அதிகராப்பூர்வமாக சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு இருக்கிறது.

சென்னையில் தனது பள்ளி படிப்பை முடித்த கையோடு மேற்படிப்புக்காக அமெரிக்க சென்ற சஞ்சய் அங்கு சினிமா மேக்கிங் கிடைத்த படிப்பை தேர்வு செய்து படித்து வந்தார். மேலும் தனது கல்லூரி நண்பருடன் இணைந்து குறும் படங்களை இயக்கி அதை யூடியூபிலும் வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் தனது முதல் படத்தை இயக்க லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் சஞ்சய் நேற்று (28) ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

இதற்காக கதையை லைகா நிறுவனத்திடம் கூறிய போது, அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டதால் அவரை வைத்து படம் இயக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் எந்த மாதிரியான படத்தை இயக்க இருக்கிறார்? யாரை வைத்து முதல் படத்தை இயக்க இருக்கிறார்? என்பது குறித்த ஆர்வம் தற்போது எழுந்திருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோ யார் என்பது தான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது.

தற்போது அதுகுறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. வீட்டிலேயே அப்பா விஜய் ஒரு ஹீரோவாக இருக்கும் போது, ஜேசன் சஞ்சய் கவனம் விஜய் சேதுபதி பக்கம் சென்றுள்ளது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த படத்தில்‌ ஹீரோவாக நடிப்பதற்கு விஜய்‌ சேதுபதியுடன்‌ பேச்சுவார்த்தை நடத்தி முடிந்து விட்டதாகவும்‌ விரைவில்‌ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்‌ என்றும்‌ கூறப்படுகிறது. மேலும்‌ இந்த படத்தில்‌ விஜய்‌ சிறப்பு தோற்றத்தில்‌ நடிக்கவும்‌ வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்‌ வட்டாரங்கள்‌ கூறுகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x