664
அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுசரணையுடன் கல்முனை சனிமவுன்ட் விளையாட்டுக்கழகம் நடாத்திய, கால்பந்தாட்ட சமரில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது.
சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கல்முனை சனி மௌண்ட் கழகத்தை எதிர்கொண்ட ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி. 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
கல்முனை அப்துல்லாஹ் மென்ஸ் நிறுவனம் சம்பியன் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசுடன் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கியது.
கல்முனை மத்திய தினகரன் நிருபர்