Tuesday, May 28, 2024
Home » தெப்பக்குளத்தில் குதித்த தாய்; 9 மாத குழந்தையும் சடலமாக மீட்பு

தெப்பக்குளத்தில் குதித்த தாய்; 9 மாத குழந்தையும் சடலமாக மீட்பு

by Prashahini
August 24, 2023 11:24 am 0 comment

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை, லோகி தோட்டத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர், தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்திருந்தார்.

அப்பெண்ணின் சடலம் அவரின் கணவரால் நேற்று (23) காலை மீட்கப்பட்டதோடு, அவர் தனது குழந்தையுடன் குளத்தில் குதித்தாரா, இல்லையா, அந்த குழந்தை எங்கே, குழந்தைக்கு என்ன நடந்தது என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், மீட்பு பணியாளர்கள் அவரின் 9 மாத குழந்தையையும் சடலமாக மீட்டுள்ளனர்.

குறித்த பெண் தன்னையும், தனது குழந்தையையும் கணவரும், அவரின் குடும்பத்தாரும் துன்புறுத்தினர் என கடிதமொன்றில் எழுதி வைத்த விட்டு தெப்பக்குளத்தில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இளம் தாயொருவர் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT