கொழும்பு தாமரைக் கோபுரத்தின் உச்சியிலுள்ள பார்வையிடும் பகுதி தற்போது புதிய மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது.
தாமரை கோபுரத்தின் உச்சியில் காணப்படும் பார்வையிடும் பகுதியிலுள்ள சுவர்களில் பெயர்களை எழுதுவது போன்ற சேதம் விளைவிக்கும் செயற்பாடுககள் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் அண்மைக் காலங்களில் இடம்பெற்றிருந்ததோடு, அவற்றை மீளமைப்பதற்கும் பாரிய செலவையும் மேற்கொள்ள வேண்டியிருந்தது.
அந்த வகையில், இந்த புதிய திட்டத்தின் மூலம், குறித்த சுவர்கள் சேதமடையாத வகையில் இப்புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளன.
தாமரை கோபுரத்திலிருந்து பார்வையிடும் போது, தென்படும் பிரபலமான இடங்கள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட பதாகைகளை அதன் சுவர்களில் காட்சிப்படுத்தும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த இடங்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட ஒரு சிறு குறிப்பும் குறித்த காட்சிப் பதாகைகள் இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.