791
வட்ஸ்அப் செயலியில் கூடிய விரைவில் உயர்தரப் புகைப்படங்களை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெடா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அந்தத் தகவலைத் தமது பேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். எவ்வாறு உயர்தரப் படங்களை அனுப்புவது என்பதைக் காட்டும் காணொளியையும் அவர் பகிர்ந்துள்ளார்.
வட்ஸ்அப் பயனீட்டாளர்களுக்கு சாதாரண தரம் மற்றும் உயர் தரம் என இரு தெரிவுகள் வழங்கப்படும்.
எந்தெந்தப் படத்தை உயர்தரத்தில் அனுப்புவது என்பதைப் பயனீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கலாம். புதிய அம்சம் அடுத்த சில வாரங்களில் உலகெங்கும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.