1.3K
100 மெகாவாட் மின்சாரத்தை 6 மாத காலத்திற்கு கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2009 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43 ஆவது பிரிவின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று (18) முதல் 6 மாத காலத்திற்கு 3 முக்கிய நிபந்தனைகளின் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த 3 நிபந்தனைகள் வருமாறு,
- குறித்த மின்சார கொள்முதல் விசேட தகுதியின் அடிப்படையில் செய்யப்பட வேண்டும் மற்றும் மின்சார கொள்முதல் ஒப்பந்த காலத்தின் முடிவில் கொள்முதல் பற்றிய சுயாதீன கணக்காய்வு செய்யப்பட வேண்டும்.
- கொத்மலை, பொல்பிட்டிய 220kv மின்கம்பி, 2024 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் இணைக்ப்பட வேண்டும்.
- இந்த மின்சாரத்தை குறைந்தபட்ச விலையின் அடிப்படையில் கொள்வனவு வேண்டும்.