இந்தியாவின் வட மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் கடும் மழை காரணமாக பண்டைய ஹிந்து கோவில் ஒன்று இடிந்ததில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பலரும் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பிரபல சுற்றுலா நகரான சிம்லாவில் இருக்கும் இந்தக் கோயில் நிலச்சரிவில் சிக்கிய நிலையில் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு காரணமாகியுள்ளது. மழையுடன் தொடர்புபட்ட விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது இருபத்து ஒரு போர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கோவில் இடிபாடுகளில் 20 தொடக்கம் 25 பேர் வரை சிக்கி இருக்கலாம் என்று அந்த மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு தெரிவித்துள்ளார்.