Saturday, June 15, 2024
Home » உலகக் கிண்ணத்தில் 9 போட்டிகளில் மாற்றம்

உலகக் கிண்ணத்தில் 9 போட்டிகளில் மாற்றம்

by sachintha
August 11, 2023 11:13 am 0 comment

அஹமதாபத்தில் ந​டைபெறவுள்ள இந்தியா –பாகிஸ்தான் இடையிலான போட்டி உட்பட எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் ஒன்பது போட்டிகளி போட்டித் திகதி மற்றும் போட்டி ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றங்கள் கொண்டுவந்திருப்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உறுதி செய்துள்ளது.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ஒக்டோபர் 15 ஆம் திகதி பதில் ஒக்டோபர் 14 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

இந்த அட்டவணை மாற்றத்தால் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பாகிஸ்தானின் மூன்று போட்டிகளும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்தின் தலா இரண்டு போட்டிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. தவிர ஒக்டோபர் 1 ஆம் திகதிய போட்டி பகலிரவு ஆட்டமாக இருந்த நிலையில் பகல் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி அட்டவணை மாற்றப்பட்டதால் ஹைதராபாத்தில் இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் போட்டி ஒக்டோபர் 12 ஆம் திகதியில் இருந்து 10 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முன் பாக். அணிக்கு போதுமான கால இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலகக் கிண்ண லீக் போட்டிகள் நவம்பர் 11 ஆம் திகதிக்கு பதில் நவம்பர் 12 ஆம் திகதி பெங்களூரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் நிறைவடையவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டி ஒக்டோபர் 5ஆம் திகதி நடப்புச் சம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அஹமதாபத்தில் நடைபெறும் போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஓகஸ்ட் 25 ஆம் திகதி ஆரம்பிக்கும் என்று ஐ.சி.சி அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT