Thursday, June 20, 2024
Home » ஆசிய கிண்ணத்திற்கான பாக். குழாம் அறிவிப்பு

ஆசிய கிண்ணத்திற்கான பாக். குழாம் அறிவிப்பு

by sachintha
August 11, 2023 4:29 pm 0 comment

இலங்கையில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் ஆசிய கிண்ண போட்டிக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒருநாள் அணியின் உப தலைவராக கடந்த ஜனவரி மாதம் நியமிக்கப்பட்ட ஷான் மசூத் நீக்கப்பட்டிருப்பதோடு இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் பஹீம் அஷ்ரப் அழைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட இன்ஸமாமுல் ஹக்கின் தலைமையில் முதல் முறை தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த அணியில் வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இடம்பெறவில்லை.

இதில் இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த தய்யப் தாஹிருக்கு முதன் முறையாக பாகிஸ்தான் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இம்மாதம் 22ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடர் இம்மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகிறது.

பாகிஸ்தான் குழாம்:
பாபர் அசாம் (தலைவர்), மொஹமட் ரிஸ்வான், மொஹமட் ஹரிஸ், இமாம் உல் ஹக், பகார் சமான், இப்திக்கார் அஹ்மட், அப்துல்லா சபீக், செளத் சகீல், தய்யப் தாஹிர், சல்மான் அலி, பஹீம் அஷ்ரப், சதாப் கான், மொஹமட் நவாஸ், நஷீம் சாஹ், சஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவுப், உசாமா மிர், மொஹமட் வசீம் ஜூனியர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT