Home » அக்கரைப்பற்றில் ரமழான் மாத குர்ஆன் விளக்க பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

அக்கரைப்பற்றில் ரமழான் மாத குர்ஆன் விளக்க பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

by sachintha
August 11, 2023 2:08 pm 0 comment

அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவினால் வருடாந்தம் ரமழான் மாதத்தில் நடத்தப்பட்டு வரும் புனித ரமழான் மாத குர்ஆன் விளக்க கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் வழிகாட்டலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் ராசித் யஹ்யா தலைமையில் முஸ்லிம் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.எம். முக்தார் ஹுசையின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுடன் இணைந்து நடைபெற்ற இக்கற்கைநெறியில் 49 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம், உதவி வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எம். சித்தி பாத்திமா, சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.ஜே.எம். நிஹ்மதுள்ளாஹ், அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். சபீஸ், செயலாளர் அப்துல் ஹமீட், நிர்வாக கிராம உத்தியோகத்தர் தாஹிர், கலாசார உத்தியோகத்தர்களான தெளபீக், றிஸ்வான், நவப்பிரியா மற்றும் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் ஜெய்னுதீன், முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் இப்றாலெப்பை, மத்தியஸ்த சபை உத்தியோகத்தர் அமீற், பலநோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கீதன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் இஸ்மத், அந்நூர் நிறுவன செயற்பாட்டாளர் ஜனூஸ் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேற்படி நிகழ்வை நடாத்துவதற்கு அனுசரணை வழங்கிய அக்கரைப்பற்று பறகத் பவுன்டேஷன் நிறுவனர்களான பைசால், நைசல், வர்த்தக சங்க தலைவர் அப்துஸ் ஸலாம், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் முஸாதிக், பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜலால்தீன், வர்த்தகர் அனஸ் உள்ளிட்ட வளவாளர்கள், பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

எம்.எப். நவாஸ்…

(திராய்க்ேகணி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT