Home » இலங்கை ஆசிய மன்றத்தினால் மருதமுனை அல்-மனாருக்கு ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

இலங்கை ஆசிய மன்றத்தினால் மருதமுனை அல்-மனாருக்கு ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு

by sachintha
August 11, 2023 10:16 am 0 comment

 

இலங்கை ஆசிய மன்றத்தின் பூரண அனுசரணையில் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான நூல்கள் மருதமுனை அல்- மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

ஆசிய மன்றத்தின் முன்னாள் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகரும், இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளனம் மற்றும் சி.ஜி.ஐ. நிறுவனம் ஆகியவற்றின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகருமான எம்.ஐ.எம்.வலீத் இலங்கை ஆசிய மன்றத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கமைய நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, கல்முனை தமிழ், சம்மாந்துறை கோட்டங்களைச் சேர்ந்த 16 பாடசாலைகளுக்கு இந்நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

எம்.ஐ.எம்.வலீத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆசிய மன்றத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் அன்டன் டீ நல்லதம்பியின் பிரசன்னத்துடன் பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளரும்,கோட்டக்கல்வி அதிகாரியுமான ஏ.பி.பாத்திமா நஸ்மியா சனூஸ், நிந்தவூர் கோட்டக்கல்வி அதிகாரி எம்.சரிபுதீன், காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரி ஜே.டேவிட்,கல்முனை தமிழ்ப்பிரிவு கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.சரவணமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஆசியமன்ற திட்ட இணைப்பாளர் எம்.ஐ.ஜாவாஹிர், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலைகளின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், ஆசிய மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வினை கிழக்கு மாகாண சபையின் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் உறுப்பினர் நூறுல் குதா உமர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்வில் ஆசிய மன்றத்தின் புத்தகங்கள் நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் அன்டன் டீ நல்லதம்பி, கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம், ஆசிய மன்றத்தின் முன்னாள் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகரும், இலங்கை உள்ளூராட்சி மன்றங்கள் சம்மேளனம் மற்றும் சி.ஜி.ஐ. நிறுவனம் ஆகியவற்றின் நிகழ்ச்சித்திட்ட ஆலோசகருமான எம்.ஐ.எம்.வலீத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

பி.எம்.எம்.ஏ.காதர்-…

(மருதமுனை தினகரன் நிருபர்-)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x