Thursday, December 12, 2024
Home » வாகனங்களை விடுவித்து தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

வாகனங்களை விடுவித்து தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

- பெண் ஒருவர் உள்ளிட்ட 3 பேரிடம் 4 கார்களை விடுவிக்க ரூ. 6.2 மில். மோசடி

by Rizwan Segu Mohideen
August 11, 2023 11:34 am 0 comment

இறக்குமதி செய்யப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 4 கார்களை விடுவித்து தருவதாக கூறி பெண் ஒருவர் உள்ளிட்ட 3 நபர்களிடம் பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் குறித்த மூவரிடமிருந்து ரூ. 6.2 மில்லியன் (ரூ. 6,271,000) பணத்தை மோசடியா பெற்றுள்ளதாக, கொழும்பு மேசாடி விசாரணை பணியகத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய, சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளார்.

அலுபோமுல்ல, அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த முறைப்பாட்டாளர்களில் ஒருவரிடமிருந்து TOYOTA AXIO ரக கார் ஒன்றை வழங்குவதாக தெரிவித்து, 39 இலட்சத்து 11 ஆயிரம் ரூபா (ரூ. 3,911,000) பணத்தையும், அதே ரக மேலும் 2 கார்களை தருவதாக மற்றைய நபரிடம் 10 இலட்சம் ரூபா (ரூ. 1,000,000) பணத்தையும், குறித்த பெண் ஒருவரிடம் WAGON-R ரக கார் ஒன்றை தருவதாக கூறி 13 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா (ரூ.1,360,000) பணத்தையும் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் மீது இவ்வாறான பண மோசடி தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை இன்றையதினம் (11) புதுக்கடை இலக்கம் 06 நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மோசடி விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT