Saturday, May 25, 2024
Home » தீ விபத்தில் இளம் ஜோடி பலி

தீ விபத்தில் இளம் ஜோடி பலி

by Prashahini
August 11, 2023 10:32 am 0 comment

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் கம்பஹா – அத்தனகல்ல பிரதேசத்தில் நேற்று (10) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடைப் பிரதேசத்தைச் சேர்ந்த 29, 27 வயதுடைய தம்பதியினரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

அத்தனகல்ல பிரதேசத்தில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இருவரும் அப்பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த வேளையிலேயே தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.

மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, கடும் தீக்காயங்களுடன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இன்னமும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT