Monday, July 22, 2024
Home » பீஜிங் வெள்ளத்தினால் பலி 33 ஆக அதிகரிப்பு

பீஜிங் வெள்ளத்தினால் பலி 33 ஆக அதிகரிப்பு

by gayan
August 10, 2023 11:04 am 0 comment

சீன தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. இன்னமும் 18 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் நேற்று (09) தெரிவித்தனர்.

பீஜிங்கில் சாதனை அளவுக்கு மழை பெய்ததால் உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. புறநகர்ப் பகுதிகளும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதிகளும் இன்னமும் மூழ்கிக் கிடக்கின்றன.

வெள்ளம் காரணமாகவும் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாலும் பலரும் உயிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வட சீனா முழுவதும் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த மாதம் 147 பேர் உயிரிழந்து அல்லது காணாமல்போயுள்ளனர். சீனாவின் வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. பல வீடுகள் இடிந்துவிட்டன. விளை நிலங்கள் பாழாகிவிட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT