Sunday, June 23, 2024
Home » மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி

மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இளைஞன் பலி

by Prashahini
August 9, 2023 12:23 pm 0 comment

மோட்டார் சைக்கிள் ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு (08) 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் முள்ளிகுளம், மருதக்கட்டி, மன்னாரைச் சேர்ந்த 22 வயதுடைய செபமாலை நிரோஜன் என்பவராவார்.

மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் கட்டைக்காடு இராணுவ முகாமுக்கு அருகாமையில் மின்சார கம்பத்துடன் மோதியுள்ளது. இதில் ஆபத்தான நிலையில் குறித்த இளைஞன் ஆம்புலன்ஸ் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துவிட்டதோடு, மரண விசாரணைக்காகவும், பிரேத சோதனைக்காகவும் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நாகர்கோவில் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT