Sunday, September 8, 2024
Home » காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை

காதல் தோல்வியால் ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை

by Prashahini
August 9, 2023 11:55 am 0 comment

கண்டியில் இருந்து பதுளை நோக்கி பயணித்த இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று (09) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை டயகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய கணபதி அனுஷா தர்ஷனி எனும் யுவதியே புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த யுவதி ஹட்டன் நகரிலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருவதாகவும் ஹட்டன் பொன்னகர் பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவருடன் ஐந்து வருடங்களாக காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட யுவதியின் சடலம் காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர் – செ.தி.பெருமாள்

தற்கொலையை தடுப்போம்!
நீங்கள் தனிமையில் இருப்பதாக உணருகின்றீர்களா அழையுங்கள்

தேசிய மனநல உதவி இலக்கம் 1926
இலங்கை சுமித்ரயோ 011 2696666
CCC line 1333

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x