சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் வேட்டையன் ராஜா கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (31) காலை 10 மணிக்கு வெளியாகி உள்ளது.
பி வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரமுகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி இரண்டாவது பாகத்தை தற்பொழுது உருவாக்கியுள்ளார்கள். இதில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், கங்கன ரணவத், வடிவேலு, ராதிகா என பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் மிகப்பெரிய பொருட் செலவில் எடுத்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு மைசூர், ஹைதராபாத், சென்னை என பல இடங்களில் நடைபெற்று வந்தது கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தார்கள்.. இந்த நிலையில் தற்பொழுது சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் டப்பிங் எடிட்டிங் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் சந்திரமுகி 2 படத்தில், ராகவா லாரன்ஸின் மிகப்பெரிய கேரக்டரான வேட்டையன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகிறது.