சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து 96 வீரர்கள் கொண்ட குழு பங்கேற்க உள்ளது. 62 வீரர்களும், 34 வீராங்கனைகளும் உள்ளடங்கிய இந்த அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் 40 விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் இலங்கை வீரர்கள் 20 விளையாட்டு நிகழ்ச்சிகளில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர, அதிகாரிகள் உட்பட 57 பேருக்கு இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்க விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளார். அவர்களில் 20 முகாமையாளர்கள், 24 பயிற்சியாளர்கள் 6 பேர் கொண்ட மருத்துவக் குழு மற்றும் 7 தேசிய ஒலிம்பிக் குழு அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.