Friday, September 29, 2023
Home » டிக்டொக்கில் எழுத்து திவுக்கு புது அம்சம்

டிக்டொக்கில் எழுத்து திவுக்கு புது அம்சம்

by sachintha
July 26, 2023 9:27 am 0 comment

டிக்டொக் தளம் எழுத்துப் பதிவுகளை மட்டும் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அது ட்விட்டர் தளத்திற்குப் போட்டியாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.

தற்போது உள்ள டிக்டொக் செயலியிலேயே அந்தப் புதிய அம்சம் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏதேனும் வர்ணத்தைப் பின்னணியாகத் தேர்ந்தெடுத்து அதில் எழுத்துகளுடன் இசையும், ஸ்டிக்கர்களும் சேர்க்கலாம்.

புதிய அம்சம் டிக்டொக் பயன்படுத்தும் அனைவரின் புத்தாக்கத்தையும் விரிவுபடுத்தும் என்று நிறுவனம் குறிப்பிட்டது. இந்த புதிய அம்சத்துடன் டிக்டொக் பயனர்களுக்கு புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் எழுத்துகள் என மூன்று அம்சங்களையும் பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்டொக் செயலியை மாதந்தோறும் சுமார் 1.4 பில்லியன் பேர் அடிக்கடி பயன்படுத்துகின்றனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களின் உரிமையாளரான மெடா நிறுவனம் அண்மையில் ட்விட்டருக்கு போட்டியாக த்ரீட்ஸ் என்ற செயலியை வெளியிட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT