Sunday, June 16, 2024
Home » ம்பப்பேவுக்கு சாதனை விலை

ம்பப்பேவுக்கு சாதனை விலை

by sachintha
July 26, 2023 3:49 pm 0 comment

பிரான்ஸ் மற்றும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி முன்கள வீரர் கைலியன் ம்பப்பேவை வாங்க சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகம் உலக சாதனை தொகையாக 259 மில்லியன் யூரோக்களை வழங்க முன்வந்துள்ளது.

24 வயதான பிரான்ஸ் அணித்தலைவர் ம்பப்பேவின் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியுடனான ஒப்பந்தம் முடிய ஓர் ஆண்டே எஞ்சியுள்ளது. தனது ஒப்பந்தத்தை நீடிப்பதை அவர் மறுத்துள்ளார். இந்நிலையில் அவர் சுதந்திரமாக வெளியேறுவதற்கு பதில் அவரை விற்பதற்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் திட்டமிட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு நெய்மார் பார்சிலோனாவில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு 200 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானதே தற்போது சாதனை தொகையாக உள்ளது. எனினும் ம்பப்பே சவூதி கழகத்தில் இணைவதற்கு இதுவரை ஆர்வம் வெளியிடவில்லை என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT