Thursday, June 20, 2024
Home » அறுகம்பே அரை மரதனில் ரத்னபால, தெரேஸ் வெற்றி

அறுகம்பே அரை மரதனில் ரத்னபால, தெரேஸ் வெற்றி

by sachintha
July 25, 2023 12:51 pm 0 comment

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்து நடாத்திய அறுகம்பே அரை மரதன் ஓட்டப்போட்டியின் பிரதான ஆடவர் பிரிவில் மஹியங்கனையைச் சேர்ந்த ரீ.டபிள்யூ. ரத்னபாலவும் மகளிர் பிரிவில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த தெரேஸ் ஈடரும் முதலிடத்தை வென்றனர்.

சுமார் 200 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீர, வீராங்கனைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் 21.1 கிலோமீற்றர் கொண்ட பிரதான அரை மரதன் போட்டி தவிர 10 கி.மீ மற்றும் 5 கி.மீ தூரம் கொண்ட மரதன் போட்டிகளும் இடம்பெற்றன. இதில் 10 கி.மீ. பிரிவில் ஜெர்மனியை சேர்ந்த மார்க்னெஸ் முதலிடத்தை பெற்றதோடு 5 கி.மீ. பிரிவில் கல்முனையை சேர்ந்த றிஹான் முதலிடத்தை வென்றார்.

அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் இஸட்.எம். ஹாஜித் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அட்டாளைச்சேனை தினகரன், பாலமுனை விசேட நிருபர்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT