Wednesday, May 22, 2024
Home » ட்விட்டருக்கு புதிய பெயர்; புதிய லோகோ

ட்விட்டருக்கு புதிய பெயர்; புதிய லோகோ

- இலோன் மஸ்க் அதிரடி முடிவு

by Prashahini
July 24, 2023 12:13 pm 0 comment

உலக அளவில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் பெயரை மாற்ற இலொன் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலொன் மஸ்க் நேற்று (23) வெளியிட்டுள்ள அவருடைய ட்விட்டர் பதிவில், விரைவில் ட்விட்டர் பிராண்டிற்கும், படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் (லோகோ) விடை கொடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கே எக்ஸ் உள்ளது. அதனை செயற்படுத்துங்கள்” என்று யக்கரினோ நேற்று (24) வெளியிட்ட ட்விட்டில் குறிப்பிட்டுள்ளார். மஸ்கும் தனது ப்ரொபைல் படத்தில் புதிய சின்னத்தை பதிவிட்டுள்ளார்.

அத்துடன் “எக்ஸ் (X) என்ற புதிய லோகோ இன்றிரவு (23) (நேற்று) வெளியிடப்பட்டு, நாளை (இன்று) (24) உலகம் முழுவதும் நேரலைக்கு அனுப்புவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்கியது எக்ஸ் எனப்படும் செயலியை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையே என்று ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியான லிண்டா யக்கரினோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எக்ஸ் என்ற எழுத்தினால் ட்விட்டர் இலச்சினை மாற்றப்படலாம் என்றும் ட்விட்டர் செயலியில் இருக்கும் குருவி படத்துக்கு பதிலாக இனி X என்ற எழுத்து இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ட்விட்டரின் லோகாவை மாற்ற இருப்பதாகவும் ட்விட்டரின் பிராண்டை சீரமைப்பு செய்ய இருப்பதாகவும் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் இந்தத் தளத்தைச் சந்தைப்படுத்தும் முறை மாற்றப்படுகிறது. ஒலி, காணொளி, செய்தி அனுப்புதல், கட்டணமுறை, வங்கிச் சேவைகள் ஆகியவற்றில் தளம் கவனம் செலுத்தும் என்று கூறப்படுகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு அதிகம் பயன்படுத்தப்படும்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT